ரூ.50,000 சம்பளம்.. BSNL நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.!
சென்னை: பொதுத் துறை நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படி ஆசை இருக்கும் நபர் நீங்கள் என்றால் உங்களுக்கான ஒரு அற்புதமான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. பிஎஸ்என்எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் சுமார் 120 காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நமது நாட்டில் முக்கிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல்.. 1980, 90ஸ் கிட்ஸ் பெரும்பாலும் பிஎஸ்என்எல் மூலமாகவே முதலில் தொலைப்பேசியைப் பயன்படுத்தி இருப்பார்கள். இப்போது தனியார் நிறுவனங்களின் போட்டியால் கொஞ்சம் ஆடிப் போய் இருந்தாலும் தரமான கம்பேக்கை கொடுக்க பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது.

பிஎஸ்என்எல்
இதற்கிடையே பிஎஸ்என்எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இப்போது தனது நிறுவனத்தில் இருக்கும் 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், BSNL-லின் அதிகாரப்பூர்வத் தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இப்போதே நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளத்திற்குச் சென்றால் தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த வேலைக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.. இந்த வேலைக்கான தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து நாம் பார்க்கலாம்!
நிறுவனத்தின் பெயர்: பிஎஸ்என்எல்
பணி: சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி
மொத்தப் பணியிடங்கள்: சுமார் 120 (டெலிகாம் பிரிவு- 95, பைனாஸ் பிரிவு- 25)
சம்பள வரம்பு: ₹24,900 - ₹50,500
கல்வித் தகுதி: B.Tech/B.E, CA
வயது வரம்பு: 21 முதல் 30 ஆண்டுகள்
அறிவிப்பு வெளியான தேதி: 27-10-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தகுதி:
டெலிகாம் பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மார்க் உடன் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல பைனான்ஸ் பிரிவுக்கு சிஏ அல்லது சிஎம்ஏ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நிச்சயம் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும், மத்திய/ மாநில அரசு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள் (அரசு விதிகளின்படி ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது)
சம்பளம்: ₹24,900 முதல் ₹50,500 வரை கிடைக்கும்
தேர்வு முறை:
கம்ப்யூட்டர் அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இதுவரை விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. விண்ணப்பங்கள் ஓபன் ஆன பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தின் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
-
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications