Canara Bank: கனரா வங்கியில் வேலைவாய்ப்பு.. எக்சாம் கிடையாது! 3,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 3,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக கனரா வங்கி உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஆட்சேர்ப்பு பணிகளை ஐபிபிஎஸ் வழியாக வங்கி நிர்வாகம் மேற்கொள்கிறது. குறிப்பிட்ட சில பணியிடங்களையும் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களையும் வங்கியே நேரடியாக அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகின்றன.

Canara Bank Canara Bank Jobs Jobs Employment Job

அந்த வகையில் தற்போது கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்ற விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

3,500 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்:

மாநில வாரியாக:

தமிழ்நாடு - 391

ஆந்திரப் பிரதேசம் - 247
அருணாச்சலப் பிரதேசம் - 05
அஸ்ஸாம் - 42
பீகார் - 122
கோவா - 25
குஜராத் - 89
சத்தீஸ்கர் - 39
ஹரியானா - 114
இமாச்சலப் பிரதேசம் - 23

ஜம்மு மற்றும் காஷ்மீர் - 16
ஜார்க்கண்ட் - 74
கர்நாடகா - 581
கேரளா - 240
பஞ்சாப் - 96
ராஜஸ்தான் - 96
சிக்கிம் - 04
தெலுங்கானா - 134
திரிபுரா - 08
உத்தரப் பிரதேசம் - 409

உத்தராகண்ட் - 48
மேற்கு வங்கம் - 150
மத்தியப் பிரதேசம் - 110
மகாராஷ்டிரா - 205
மணிப்பூர் - 03
மேகாலயா - 05
மிசோரம் - 02
நாகாலாந்து - 04
ஒடிசா - 104

லடாக் (யூனியன் பிரதேசம்) - 01
லட்சத்தீவு (யூனியன் பிரதேசம்) - 04
புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) - 04
சண்டிகர் (யூனியன் பிரதேசம்) - 06
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (யூனியன் பிரதேசம்) - 04
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (யூனியன் பிரதேசம்) - 01
டாமன் மற்றும் டையூ (யூனியன் பிரதேசம்) - 01
டெல்லி (யூனியன் பிரதேசம்) - 93

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 01.01.2023 தேதிக்கு முன்பாக பட்டம் முடித்தவர்கள் விண்ணபிக்க முடியாது.

வயது வரம்பு:

20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 02.09.1998 க்கு முன்பாகவோ 01.09.2006 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும்.

ஊதியம்:

மாதம் ரூ.16,650 ஊதியமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக மாதம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.canarabank.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 17.10.2026 கடைசி நாளாகும்.

அதிகாரப்பூர்வை தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.canarabank.bank.in/documents/d/guest/apprenticeship-advertisement-202627

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+