சென்னையில் ஐடி வேலை.. Capgemini தரும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில்(Capgemini) சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் பணி செய்யலாம்.
Capgemini (கேப்ஜெமினி).. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இதுவாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் உள்ள கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை கேப்ஜெமினி நிறுவனத்தில் பிஎல்எஸ்க்யூஎல் டெவலப்பர் (PLSQL Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பிரைமரி ஸ்கில்ஸாக PL/SQL Development தெரிந்திருக்க வேண்டும்.
செகண்டரி ஸ்கில்ஸாக Oracle Performance Tuning Concepts, Indexes Hints Partitioning Cocepts, Explain Plan TkProf உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேசன் திறமையை கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாத சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் வைத்திருப்பது நல்லது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications