Capgemini ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேப்ஜெமினியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கேப்ஜெமினி இணையதளம் சென்று பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
நம் நாட்டில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் கேப்ஜெமினி (Capgemini) ஒன்றாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி கேப்ஜெமினி நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் (Data Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விண்ணப்பம் செய்வோருக்கான சில முக்கிய ஸ்கில்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேப்ஜெமினியின் டேட்டா இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பைத்தான் (Python) தெரிந்திருக்க வேண்டும். பாப்புலர் மெஷின் லேனிங் லைப்ரேரிஸ் மற்றும் பிரேம்வொர்க்ஸ்களான TensorFlow, Keras, Scikit-learn பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் K-Means, hierarchical clustering, decision tress, support vector machines, random forests தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். டேட்டா பேசஸ், MySQL பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கூறிய தகுதியுடன் பணி அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நேர்க்காணலின்போது சம்பளம் பற்றி தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஏனென்றால் இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த மாதம் 21ம் தேதி வெளியாகி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பதற்கான விண்டோ முடிவுக்கு வரலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications