ரூ.4 லட்சம் + ரூ.25 ஆயிரம் இன்சென்டிவ்.. Capgemini ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ஆக. 18 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேப்ஜெமினியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் + ஒரு நேர இன்சென்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 18ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Capgemini உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு நம் நாடு மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.

நம் நாட்டை எடுத்து கொண்டால் பெங்களூர், புனே, ஹைதராபாத், மும்பை, குர்கிராம், கொல்கத்தா மற்றும் நொய்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

capgemini-hiring-for-network-engineer-role-with-4-lpa-per-annum

இந்நிலையில் தான் ஐடி நிறுவனத்தில் தற்போது நெட்வொர்க் இன்ஜினியர் (Network Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி/ சர்க்கியூட் Branches மற்றும் எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை 2025ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் தேவையில்லை. ஏனென்றால் இது Fresher-களுக்கான வேலைவாய்ப்பாகும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஒரு நேர இன்சென்ட்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 18 (நாளை மறுநாள்) நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் குர்கிராமில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோருக்கு ஆக்டிவ் டிஜி லாக்கர் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அதேபோல் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும். இது இருந்தால் மட்டுமே பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

ஷிப்ட்டை பொறுத்தமட்டில் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இருக்கும். ஜெனரல் ஷிப்ட் மற்றும் மதிய ஷிப்ட் என்பது இருக்காது. குர்கிராமில் உள்ள நிறுவனத்தில் தான் பணி நியமனம் இருக்கும் என்பதால் அங்கு அமர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் பணி இருக்கும். 2 நாட்கள் விடுமுறை இருக்கும். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்து இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+