ரூ.4 லட்சம் வரை சம்பளம்! Capgemini ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று (செப்டம்பர் 30) கடைசி நாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Capgemini ஐடி நிறுவனத்தில் SAP MM Domain Hiring என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட டொமைனில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதன்படி பர்சேசிங் மற்றும் வெண்டார் மேனேஜ்மென்ட் , இன்வென்டரி மேனேஜ்மென்ட் மற்றம் வார்ஹவுஸ் அக்டிவிட்டிஸ், டைரக்ட் மெட்டீரியல்/ இன்டைரக்ட் மெட்டீரியல், சர்வீஸ் பர்சேசிங் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். புதிய விஷயங்களை உடனடியாக கற்றுக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். டீம் பிளேயராக செயல்பட தயாராக இருக்க வேண்டும். அதேபோல் புதிய டெக்னாலஜியை ஏற்றுக்கொண்டு பணியாற்ற தயாராக வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று நள்ளிரவு 11.59 மணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.இப்படியான விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பம் செய்வதாலேயே இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள் என்று நம்ப வேண்டாம். விண்ணப்பத்தில் உள்ள தகுதி அடிப்படையில் தான் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு டிஜி லாக்கர் அக்கவுண்ட் மற்றம் ஆக்டிவ்வான செல்போன் எண் இருக்க வேண்டும். அந்த செல்போன் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இது ஒரு PAN India பணியாகும். இதனால் நம் நாட்டில் உள்ள கேப்ஜெமினியின் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications