‛பெண்கள் மட்டும்’.. ரூ.4 லட்சம் சம்பளத்தில் ஐடி வேலை.. Capgemini-யில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில் (Capgemini) சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று (செப்டம்பர் 29) கடைசி நாளாகும். 2023-2024ம் ஆண்டில் படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
Capgemini (கேப்ஜெமினி).. நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இதுவாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கேப்ஜெமினி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தேதி இன்றுடன் (செப்டம்பர் 29) முடிவுக்கு வர உள்ளது.
அதாவது கேப்ஜெமினி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் பணிக்கு பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பிரிவில் ஏதாவது ஒரு துறையில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்சிஏ, எம்எஸ்சி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2023-2024ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில், பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு நேர இன்செட்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதனால் முதல் ஆண்டு ரூ.4.25 லட்சம் சம்பளமாக கிடைக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பை, புனே, பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர தேவை என்றால் பிற இடங்களுக்கும் சென்று பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications