பெண்களுக்கு ‛ஜாக்பாட்’.. பி.காம், பிஏஎஃப் முடித்தவர்களுக்கு வேலை.. அழைக்கும் Capgemini
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில்(Capgemini) இருந்து பெண்களுக்கு என்று பிரத்யேகமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் பிகாம், பிஏஎஃப் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாத பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Capgemini (கேப்ஜெமினி) செயல்பட்டு வருகிறது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கேப்ஜெமினியில் பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி கேப்ஜெமினி நிறுவனத்தில் DCoE processor பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிகாம், பிஏஎஃப் பிரிவில் 2024ம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் விண்ணப்பம் செய்வோருக்கு பணி அனுபவம் தேவையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு எந்த அரியர்சும் இருக்க கூடாது. ஆங்கிலத்தில் சரளமாகவும் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் நல்ல இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ், பேசிக் கம்ப்யூட்டிங் ஸ்கில்ஸ் இருப்பதோடு 24/7 என்ற அடிப்படையில் வேலை செய்ய ரெடியாக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மும்பையில் உள்ள கேப்ஜெமினி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. ஏனென்றால் இந்த பணிக்கான விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட் கண்டிப்பாக்க இருக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு 3 படிநிலைகளில் இண்டர்வியூ என்பது இருக்கும். Assessment -1ல் English MCQ, Assessment 2வில் ஸ்போக்கங் இங்கிலிஸ் மற்றும் வெர்பல் கம்யூனிகேஷன் டெஸ்ட் இருக்கும். Assessment 3ல் டெக்னிக்கல் மற்றும் எச்ஆர் இண்டர்வியூ என்பது இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சப்போர்ட் ரோலில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications