அனுபவம் வேண்டாம் + ரூ.4 லட்சம் சம்பளம்.. பெண்களுக்கு மட்டும்.. வேலைக்கு அழைக்கும் Capgemini
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில்(Capgemini) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்ய அக்டோபர் 13ம் தேதி கடைசி நாளாகும். இந்த பணிக்கு 2023-2024ம் ஆண்டில் படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாத பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Capgemini (கேப்ஜெமினி) செயல்பட்டு வருகிறது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் நம் நாட்டில் பெங்களூர், மும்பை, புனே, சென்னை உள்பட பல இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் கேப்ஜெமினியில் பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி கேப்ஜெமினி நிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் (Aeronautical) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் ஏரோநாட்டிக்ஸ் அல்லது ஏரோ ஸ்பேஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2023-2024ம் ஆண்டில் படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இது பெண்களுக்கான பிரத்யேகமான அறிவிப்பு என்பதால் அவர்களால் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஏரோ டொமைன்ஸ் மட்டுமின்றி பிற பணிகளும் வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு நேர இன்செட்டிவ்வாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதனால் முதல் ஆண்டு ரூ.4.25 லட்சம் சம்பளமாக கிடைக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Active DigiLocker அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Capgemini நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் அக்டோபர் 13ம் தேதி இரவு 11.59க்குள் செய்ய வேண்டும்.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
