11 பிரிவில் காலியிடங்கள்.. சென்னையில் ஐடி வேலை வேண்டுமா? இன்று காலை 11 மணிக்கு இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் 11 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முன்பதிவு செய்துவிட்டு இன்று காலை 11 மணிக்கு நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. டிசிஎஸ், எச்சிஎல், காக்னிசண்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி பிற ஐடிநிறுவனங்கள், ஸ்டார்ட் அப்பாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.

it jobs jobs job

அந்த வகையில் சென்னை ஓஎம்ஆர் துரைப்பாக்கத்தில் சிடிபி360 டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (CDP360 Technologies Pvt Ltd) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் ஐடி மற்றும்டெவலப்மென்ட் பிரிவில் மொத்தம் 8 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஃபுல் ஸ்டாக் டெவலப்பர், ஃபுளுட்டர் டெவலப்பர் (Flutter Developer), யுஐ/யுஎக்ஸ் டிசைனர், ஏஐ (Artificial Intelligence), DevOps Engineer, மொபைல் அப் டெவலப்பர், பேக்எண்ட்டெவலப்பர்(NodeJs), சாப்ட்வேர் டெஸ்ட்டர்/க்யூஏ இன்ஜினியர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

மேலும் சேல்ஸ் மற்றும் குரோத் பிரிவில் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி டெக் சேல்ஸ் ஸ்டட்டஜிஸ்ட் (Teh Sales Strategist), குரோத் ஸ்டேட்டஜிஸ்ட்/மார்க்கெட்டர் (Growth Strategist/Marketer), டெலி மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டிருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். அதேபோல் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பு கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று (ஏப்ரல் 19) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது CDP 360 Technologies Pvt Ltd, 3, Siri Towers, Thoraipakkam, OMR, Chennai 600097 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்து உரிய நேரத்தில் செல்ல வேண்டும். தொடர்புக்கு 8925841207 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+