6 இலக்க மாதசம்பளம்.. 570 இடங்களுக்கு ஆள்தேடும் ‛சிடாக்’.. சென்னையில் வேலை செய்ய சூப்பர் வாய்ப்பு!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிடாக் மையத்தில் காலியாக உள்ள 570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
சென்னை: மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிடாக் மையத்தில் ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.22.9 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிடாக் (C-DAC) எனும் மஉயர்கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing) செயல்பட்டு வருகிறது.
இது பல்வேறு உயர் கணிணி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
‛சிடாக்' மையத்தில் மொத்தம் 4 பிரிவுகளில்570 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு 30 பேர், ப்ராஜெக்ட் என்ஜினீயர்/மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு 300 பேர், ப்ராஜெக்ட் மேனேஜர்/ப்ரோகிராம் மேனேஜர், ப்ரோகிராம் டெலிவரி மேனஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 40 பேர், சீனியர் ப்ராஜெக்ட் என்ஜினீயர், ப்ராஜெக்ட் லீட் ஆபிசர் பணிக்கு 200 என மொத்தம் 570 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு 30 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் என்ஜினீயர்/மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் மேனேஜர்/ப்ரோகிராம் மேனேஜர், ப்ரோகிராம் டெலிவரி மேனஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 50 வயதுக்குள்ளும், சீனியர் ப்ராஜெக்ட் என்ஜினீயர், ப்ராஜெக்ட் லீட் ஆபிசர் பணிக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஇ, பி.டெக், எம்இ, எம்டெக், பட்ட மேற்படிப்பு அல்லது பிஎச்டி படிப்பை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம், பாட்னா, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

மாத சம்பளம் என்ன?
ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5.04 லட்சம் வரையும், ப்ராஜெக்ட் என்ஜினீயர்/மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் பணிக்கு ஆண்டுக்கு ரூ.4.49 லட்சம் முதல் ரூ.7.11 லட்சம் வரையும் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் மேனேஜர்/ப்ரோகிராம் மேனேஜர், ப்ரோகிராம் டெலிவரி மேனஜர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12.63 லட்சம் முதல் ரூ.22.9 லட்சம் வரையும், சீனியர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.8.49 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 20ம் தேதிக்குள் cdac.in இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்த்து ஆன்லைனில் விண்ணப்பம் காண Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications