டிகிரி மட்டும் போதும்.. மத்திய ஆயுதப்படை பிரிவில் ஏராளமான வாய்ப்பு.. பெண்களும் விண்ணப்பிக்கலாம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் பிரிவில் காலியாக உள்ள ஏராளமான அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்), இந்தோ-திபெத்தியன் எல்லை போலீஸ் (ஐடிபிபி), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.

இதில் தற்போது பிஎஸ்எப் பிரிவில் 86 பேர், சிஆர்பிஎப்புக்கு 55 பேர் சிஐஎஸ்எப்க்கு 91 பேர், ஐடிபிபி பிரிவுக்கு 60 பேர், எஸ்எஸ்பி பிரிவுக்கு 30 பேர் என மொத்தம் 322 பேர் அசிஸ்டென்ட் கமாண்டட் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வை யூபிஎஸ்சி மேற்கொள்ள உள்ளது.
இந்த பணிக்கு ஆண்களோடு சேர்ந்து பெண்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 20 வயதும், அதிகபட்சமாக 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.upsconline.nic.in இணையதளம் மூலம் மே மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, உடல் திறனறி தேர்வு, நேர்க்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி, திறமையை பொறுத்து நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications