சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்.. பி.இ முடித்தவரக்ளுக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகள் (எஸ்.ஓ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ, பி.டெக், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.20 லட்சம் வரை வழங்கப்படும்.

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள். நாடு முழுக்க பல்வேறு வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்படுகின்றன.

Central Bank of India Announces SO Recruitment with 1 2 Lakh Salary

பணியிடங்கள் விவரம்:

அதன்படி தற்போது செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (Central Bank of India) 26 நிபுணர் அலுவலர் (Specialist Officers - SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தலைமை மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதியை பொறுத்தவரை பி.இ/பி.டெக், MBA, CA போன்ற கல்வித் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

வயது வரம்பு

வயது வரம்பை பொறுத்தவரை பொதுவாக 20 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Scale IV பணியிடங்களுக்கு 20 முதல் 45, Scale III மற்றும் Scale II பணியிடங்களுக்கு 20 முதல் 35 வயது வரை, Scale I பணிகளுக்கு 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC - NCL) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், OBC (NCL) பிரிவில் 13 ஆண்டுகள், ST/SC பிரிவில் 15 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு:

* சம்பளத்தை பொறுத்தவரை, தலைமை மேலாளர் (Chief Manager - Scale IV) பதவிக்கு மாதம் ₹1,02,300 முதல் ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.
* மூத்த மேலாளர் (Scale III) பதவிக்கு மாத ஊதியம் ₹85,920 முதல் ₹1,05,280 வரை வழங்கப்படும்.
* மேலாளர் (Scale II) பதவிக்கு ₹64,820 முதல் ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என இரண்டு கட்டங்களாக இருக்கும். விண்ணப்பக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD) ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு ₹175/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், விண்ணப்பக் கட்டணம் ₹850/- ஆகும். கட்டணம் இணையவழியில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://centralbank.bank.in/ வழியாக தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 9, 2026 முதல் ஏப்ரல் 30, 2026 வரை மட்டுமே செயல்படும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://centralbank.bank.in/sites/default/files/NOTIFICATION%20OF%20RECRUITMENT%20PROCESS%20FOR%20SELECTION%20OF%20OFFICERS%20IN%20SPECIALIST%20CATEGORY%20IN%20RISK%20MANAGEMENT%20STREAMS.%20_1.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+