சென்ட்ரல் வங்கியில் வேலை.. 3,000 பணியிடங்கள்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்! விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 3 ஆயிரம் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் வங்கி உள்ளது. பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கியின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ளன. சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாக அவ்வப்போது நிரப்பப்படுகிறது.

அதுபோக அவ்வப்போது பயிற்சி பணியிடங்களும் சென்ட்ரல் வங்கியில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது 3 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 31.03.2020 க்கு பிறகு பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.04.1996 - 31.03.2004க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ரூ.400 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு நடைபெறும்.
சம்பளம் எவ்வளவு?: இந்த பணியிடங்கள் முற்றிலும் பயிற்சி (apprenticeship) அடிப்படையிலானது ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்
-
ரூ.45 கோடியை மறைக்க திட்டமிட்டு ரூ.24,000 கோடியை இழந்த HDFC வங்கி.. பங்குச்சந்தையில் ரத்தக்களறி..!! -
இதுதான் ஹெச்டிஎப்சி வங்கியின் அறமா? 45 கோடி மார்க்கெட்டிங் சர்ச்சையின் பின்னணி? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications