சென்ட்ரல் வங்கியில் 4,500 பணியிடங்கள்! சொந்த ஊரிலேயே வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்.. டிகிரி தகுதி தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ட்ரல் வங்கியில் 4,500 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 202 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக சென்ட்ரல் வங்கி உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியின் கிளைகள் தமிழகத்தில் உள்ளன.

central-bank-of-india-recruitment-opportunity-to-work-in-your-hometown-4500-apprentice-posts

சென்ட்ரல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வங்கியில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

அப்ரெண்டீஸ்: 4,500 பணியிடங்கள்,
தமிழகத்தில் மட்டும் 202 பணியிடங்கள் உள்ளன.

மாவட்டவாரியாக உள்ள பணியிடங்கள்:
செங்கல்பட்டு - 7, சென்னை - 25, காஞ்சிபுரம் - 6, ராணிப்பேட்டை- 4, திருவள்ளூர் - 7, வேலூர் - 8, கோவை - 15, தருமபுரி - 4, திண்டுக்கல் - 5, ஈரோடு - 3, கரூர் - 2, கிருஷ்ணகிரி - 5, நாமக்கல் - 2, நீலகிரி - 5, சேலம் - 3, கன்னியாகுமரி - 8, திருப்பூர் - 5, ராமநாதபுரம் - 3, சிவகங்கை - 6,

தென்காசி - 4, தேனி-4, திருநெல்வேலி-6, தூத்துக்குடி-9, விருதுநகர் -3, அரியலூர்-1, கடலூர்-11, கள்ளக்குறிச்சி-2, மயிலாடுதுறை-1, நாகப்பட்டினம்-1, பெரம்பலூர்-1, புதுக்கோட்டை-1, புதுக்கோட்டை-4. திருச்சிராப்பள்ளி-5, திருவண்ணாமலை-4, விழுப்புரம்-10 .

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு ஆண்டு.

ஊதியம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு உள்ளிட்டவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு கட்டணம்:

தேர்வுக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்.
பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டணம் ஆகும்.
பிற பிரிவினருக்கு ரூ.800 ஆகும்.
ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்;

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 07.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2025
தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை முதல் வாரம்

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.centralbankofindia.co.in/sites/default/files/07.06.2025%20apprentice%20notification%20FY%202025-26%20copy%20_0.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+