மாதம் 1 லட்சம் சம்பளத்தில் சென்ட்ரல் வங்கியில் வேலை.. 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிங் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI), நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தான் தற்போது 350 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
* வெளிநாட்டுப் பரிவர்த்தனை அதிகாரி (Foreign Exchange Officer) - 50 காலிப்பணியிடங்கள்
* சந்தைப்படுத்துதல் அதிகாரி (Marketing Officer) - 300 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
வெளிநாட்டுப் பரிவர்த்தனை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். CFA/CA அல்லது சம்பந்தப்பட்ட துறையில் MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வணிக வங்கியில் குறைந்தது ஐந்தாண்டு அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் கட்டாயம்.
மார்க்கெட்டிங் ஆபிசர் பணியிடத்திற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கொண்ட MBA / PGDBA / PGDBM / PGPM / PGDM முடித்திருக்க வேண்டும். மற்றும் பணி சார்ந்த அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
01.01.2026 அன்று தேதிப்படி வயது வரம்பானது கணக்கில் கொள்ளப்படும். இதன்படி
* வெளிநாட்டுப் பரிவர்த்தனை அதிகாரி பதவிக்கு 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* சந்தைப்படுத்துதல் அதிகாரி பதவிக்கு 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பட்டியல் இனத்தவர்/பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும், சலுகைகள் உண்டு.
சம்பளம் என்ன?
* வெளிநாட்டுப் பரிவர்த்தனை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும்.
* சந்தைப்படுத்துதல் அதிகாரிகளுக்கு ரூ.44,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் கிடைக்கும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பக் கட்டணமாக, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹175/- செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹850/- செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.centralbankofindia.bank.in/) சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதியாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: http://www.centralbankofindia.bank.in/
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications