மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு!
சென்னை: முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கியில் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 275 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. மாதம் ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நாடு முழுக்க இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் கடந்த மாதம் சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 275 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

பணியிடங்கள் விவரம்:
சென்ட்ரல் வங்கியில் மொத்தம் 275 சிறப்பு அதிகாரி காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. மென்பொருள் உருவாக்குநர்கள், மொபைல் உருவாக்குநர், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டிஜிட்டல் சேனல் மேலாளர், கிளவுட் மேலாளர், தகவல் பாதுகாப்பு, நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், IT அதிகாரி பணியிடங்கள் மற்றும் ரிஸ்க் மேலாளர், வரிவிதிப்பு / CA போன்ற சிறப்புப் பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி:
பி.இ, பிடெக், எம்சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு
உதவி மேலாளர் (Scale I) பணிக்கு 30 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மேலாளர் (Scale II) மற்றும் மூத்த மேலாளர் (Scale III) 35 வயதும், தலைமை மேலாளர் (Scale IV) 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். இதன்படி, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள். மாற்றுத்திறனாளி (PwBD) Gen/EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
* உதவி மேலாளர் - மாதம் ரூ.48,480 - 85,920
* மேலாளர் - மாதம் ரூ.64,820 - 93,960
* மூத்த மேலாளர் - மாதம் ரூ.85,920 - 1,05,280
* தலைமை மேலாளர் - மாதம் ரூ.1,02,300 - 1,20,940.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST மற்றும் PWD பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.850 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://centralbank.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், முழுமையான அறிவிப்பை படித்து தகுதிநிலையை உறுதி செய்துகொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணபிக்க வரும் 23 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். இன்னும் 2 நாட்களே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.












Click it and Unblock the Notifications