அசத்தலான பணி.. கைநிறைய சம்பளம்.. மத்திய நிலக்கரி நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! ரெடியா?
டெல்லி: மத்திய நிலக்கரி பீல்ட் லிமிடெட் காலியாக ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தினம் மற்றும் மாத சம்பளம் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தினசரி சம்பளம் என்றால் ரூ.1,087 -ம், மாதஊதியம் என்றால் ரூ.31,852-ம் வழங்கப்பட உள்ளது.

மத்திய நிலக்கரித்துறை அமைசக்கத்தின் கட்டுப்பாட்டில் மத்திய நிலக்கரி பீல்ட் லிமிடெட்(Central Coalfields Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மைனிங் சிர்தார் (Mining Sirdar) பணிக்கு 77 பேர், எலக்ட்ரிசியன் /டெக்னீசியன் பணிக்கு 126 பேர், துணை சர்வேயர் பணிக்கு 20 பேர், உதவி போ்மென் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு 107 பேர் என மொத்தம் 330 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மைனிங் சிர்தார் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு மைனிங் சிர்தார் சான்று அல்லது டிப்ளமோ மைனிங் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரிசீயன் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கான நிகரான படிப்போடு ஐடிஐயில் எலக்ட்ரிசீயன் படிப்பை முடித்திருக்க வேண்டும். துணை சர்வேயர் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கான நிகரான படிப்புடன் மைன்ஸ் சர்வே சான்று பெற்றிருக்க வேண்டும். உதவி போர்மென் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கானது. விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும், ஒபிசி பிரிவினர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மைனிங் சிர்தார், துணை சர்வேயர், உதவி போர்மென்(எலக்ட்ரிக்கல்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.31,852 சம்பளமாக வழங்கப்படும். எலக்ட்ரிசீயன்/டெக்னீசியன் பணிக்கு தினமும் ரூ.1,087.17 சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.centralcoalfields.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் Based தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications