மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு நிறுவனமான காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி மேலாளர், ஜூனியர் உதவியாளர் என மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடு நிறுவனம் உள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் காட்டன்கள் கொள்முதல், ஏற்றுமதி, விநியோகம், சமமான பகிர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Central Government Job CCI Recruitment 2026 148 Permanent Vacancies Across India

காலிப்பணியிடங்கள் விவரம்:

கடந்த 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 148 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் உள்ள CCI அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

உதவி மேலாளர் (அலுவல் மொழி) - 1
உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) - 1
மேலாண்மை பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்) - 8
மேலாண்மை பயிற்சியாளர் (கணக்கியல்) - 8
ஜூனியர் கமர்ஷியல் எக்ஸிகியூட்டிவ் - 50
ஜூனியர் உதவியாளர் (கணக்கியல்) - 50
ஜூனியர் உதவியாளர் (பொது) - 30

கல்வித் தகுதி:

டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பி.காம்., பி.எஸ்சி (வேளாண்மை), பி.இ., பி.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சிஏ., சிஎம்ஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இங்கு கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு:

24.07.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதன்படி, உதவி மேலாளர் பணிக்கு மட்டும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகள் தளர்வும், ஓபிஎசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

உதவி மேலாளர் - ரூ.40,000 - ரூ.1,40,000
மேலாண்மை பயிற்சியாளர் - ரூ.30,000 - ரூ.1,20,000
ஜூனியர் பணியிடங்கள் - ரூ.22,000 - ரூ.90,000

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்ப கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.1,770 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.590
செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 09.07.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2026 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/5/5601370283.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+