Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரியில் வேலை பார்க்க ஆசையா? அதுவும் மத்திய அரசு வேலைங்க.. 50 பணியிடங்கள்.. தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரியில் உள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி அப்ளை பண்ணுவது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலமான நீலகிரியில் உள்ள அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் கார்டைட் தொழிற்சாலை உள்ளது. அதாவது, வெடிமருந்து தொழிற்சாலை (Cordite Factory) செயல்பட்டு வருகிறது.

job bank job

காலியிடங்கள், கல்வித் தகுதி:

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் 50 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

சிபிடபிள்யூ - 50 இடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு + என்.ஏ.சி கோர்ஸ் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட் மெடல் பணியாளர், எலக்ட்ரிஷியன், எலக்ட்ரானிக், மெக்கானிக், பாய்லர், அட்டண்டண்ட், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு

10.02.2026- தேதிப்படி 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

19,900 + அகவிலைப்படி என மத்திய அரசு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட், என்சிவிடிதேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பணியிடத்தின் பெயரை கவரில் தெளிவாக குறிப்பிடுவது அவசியம். தேவையான கல்வி சான்றிதழ் நகல்களுடன்

The Chief General Manager,
Cordite Factory, Aruvankadu,
The Nilgiris District.
Tamilnadu Pin -643 202. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விண்ணப்பிக்க வரும் 10.02.2026 கடைசி நாளாகும். தேர்வுஅறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய https://ddpdoo.gov.in/documents/doc/9db417d7fd3b82bcddf7502f054be929.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+