நாணயம் அச்சிடும் ஆலையில் வேலை.. 95,000 சம்பளம்! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அப்ளை பண்ண ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் நாணயம் அச்சிடும் ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை தொழில்நுட்ப வல்லுநர், இளநிலை அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர் என பல்வேறு பதவிகளில் மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ, டிப்ளமா, பி.இ./பி.டெக், பி.எஸ்.சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 21 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இந்தியாவில் நாணய அச்சடிப்பு தொழிற்சாலை மும்பை உள்ளிட்ட 4 இடங்களில் உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த ஆலையில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன.

Job

பணியிடங்கள் விவரம்:

அந்த வகையில், மத்திய அரசின் நாணயம் அச்சிடும் ஆலையில் இளநிலை தொழில்நுட்ப வல்லுநர், இளநிலை அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர் என பல்வேறு பதவிகளில் மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேற்பார்வையாளர் (அளவீடு - 02, மெக்கானிக்கல் - 03, எலக்ட்ரிக்கல் - 02, மெட்டலார்ஜி - 01) என மொத்தம் 08 மேற்பார்வையாளர் பதவிகள் உள்ளன. செதுக்குநர் (சிற்பம் / உலோக வேலைகள்) - 01, இளநிலை அலுவலக உதவியாளர் - 13, இளநிலை இந்தி தட்டச்சு செய்பவர் - 01 மற்றும் ஆய்வக உதவியாளர் - 01 என மொத்தம் 21 பிற வகை பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி:

ஐடிஐ, டிப்ளமோ, பி.இ./பி.டெக், பி.எஸ்.சி அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இளநிலை அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை இந்தி தட்டச்சு செய்பவர் பதவிகளுக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை (2026 ஏப்ரல் 27 நிலவரப்படி) மேற்பார்வையாளர் (அளவீடு, இயக்கவியல், மின்சாரம், உலோகம்) பதவிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். செதுக்குநர், இளநிலை அலுவலக உதவியாளர், இளநிலை இந்தி தட்டச்சு செய்பவர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், OBC-க்கு 13 ஆண்டுகள், SC/ST-க்கு 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

* மேற்பார்வையாளர் பதவிகளுக்கு மாதம் ரூ.27,600 - 95,910/- வரை சம்பளம் வழங்கப்படும்.
* செதுக்குநர் (சிற்பம் / உலோக வேலைகள்) பதவிக்கு ரூ.23,910 - 85,570/- சம்பளம் வழங்கப்படும்.
* இளநிலை அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.21,540 - 77,160/- சம்பளமாக கிடைக்கும்.
* இளநிலை தொழில்நுட்ப வல்லுநர் (அனைத்துப் பிரிவுகள்) பதவிகளுக்கு ரூ.18,780 - 67,390/- வழங்கப்படும்.

தேர்வு முறை:

இளநிலை அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை இந்தி தட்டச்சு செய்பவர் ஆகிய பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் தட்டச்சுத் தேர்வு நடத்தப்படும். மற்ற அனைத்து பதவிகளுக்கும் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே இறுதித் தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்:

டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்தப்படும். விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- எனவும், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000/- எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறப்படாது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய அரசின் நாணயம் அச்சிடும் ஆலையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://igmnoida.spmcil.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் 28 அன்று பிற்பகல் 3:00 மணி முதல் வரும் ஏப்ரல் 27 அன்று பிற்பகல் 2:59 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+