பெரிதாக வெடிக்கும் நீட் மாணவர் போராட்டம்.. நாடாளுமன்றம் நாள் முழுக்க ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. நீட் உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடிய போதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிறகு நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. அவை தொடங்கும் முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மிக பெரிய சாதனைகளை படைத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு பல முக்கியமான மசோதாக்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

Parliament India

நாடாளுமன்றம்

நேற்று காலை அவை 11 மணிக்கு கூடியது. இருப்பினும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது தொடர்பாகவும் அயோத்தி விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் அவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, எதிர்க்கட்சிகள் அமளி தொடர்ந்தது.

இதனால் நாள் முழுக்க அவை பல முறை தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் லோக்சபா, ராஜ்யசபா என இரண்டிலுமே பெரிதாக எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அவை நிகழ்வுகள் முடிந்தன. அதேநேரம் நீட் தொடர்பான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே இப்படி அவை கொஞ்சம் கொஞ்சமாக ஒத்திவைக்கப்பட்டதாக மதுரை சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "வழக்கமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டால் குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேலாக ஒத்திவைக்கப்படும். ஆனால் இன்று, வெளியில் போராடும் மாணவர்களை நாங்கள் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக, அவை ஒவ்வொரு அரை மணி நேரமாகத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, இன்று பகல் முழுவதும் நாடாளுமன்றத்திற்குள் இணைய வசதியும், வாட்ஸ்அப் செயலியும் முடக்கப்பட்டது. எத்தகைய அடக்குமுறையாலும் நியாயமான எழுப்பும் கேள்விகளை அழித்துவிட முடியாது!" என பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது!

நேற்றைய தினம் மாணவர்கள் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அவர்களை நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட போலீஸ் அனுமதிக்கவில்லை. இருப்பினும், மாணவர்களில் ஒரு தரப்பினர் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். மேலும், நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது. போலீசாரும் துப்பாக்கியுடன் மாணவர்களை நோக்கி குறிவைத்ததால் பரபரப்பு நிலவியது. இருப்பினும், பெரியளவில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

நாள் முழுக்க ஒத்திவைப்பு

இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. காலை 11 மணிக்கு இரு அவைகளுமே கூடிய போது எதிர்க்ட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+