என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அடிச்சது யோகம்.. மத்திய அரசு வேலை! மாதம் 1.12 லட்சம் சம்பளம்!
சென்னை: எல்லை சாலை அமைப்பு, மத்திய நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,748 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவில், எலக்ட்ரிக்கள் பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. மத்திய அரசு விதிகளின் படி, பண்யிடங்களுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்பை நடத்துவது இதன்பணியாகும். அந்த வகையில், தற்போது 1,478 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 1,748 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் உள்ளிட்ட பிரிவுகள் காலியிடங்கள் உள்ளன. மத்திய நீர்வளம், எல்லை சாலை அமைப்பு, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பி இ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பை தெளிவாக படித்து தெரிந்து கொள்ள்வும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7 வது ஊதிய கமிஷன் படி மாதம் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்வு முறை:
சிபிடி1 & சிபிடி 2 என கணினி வழியிலான இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் . அதன் பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:
நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்னப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 22.09.2026 அன்று கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_je_2026.pdf


Click it and Unblock the Notifications
