ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தால் போதும்.. ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசுன் வேலை
சென்னை: மத்திய அரசின் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் விளையாட்டுத் துறைக்குக்கு கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள செஃப் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

காலியாக உள்ள பணியிடங்கள்: செஃப் 3, ஊட்டச்சத்து நிபுணர் 12
கல்வித் தகுதி: செஃப் - ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் இளங்கலை படிப்பும், செஃப் கோர்ஸ் சான்றிதழும் தேவை
கல்வித் தகுதி: ஊட்டச்சத்து நிபுணர் - ஊட்டச்சத்து படிப்பில் மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: இரு பணியிடங்களுக்கும் ரூ.75,000 முதல் 1,00,000 வரை வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் முறை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மார்ச் 13
கூடுதல் தகவல்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=14317












Click it and Unblock the Notifications