மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய அரசு நிறுவனமான ICSIL- இல் ஆய்வக உதவியாளர் மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் ஆகிய பதவிகளுக்கு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 10 ம் வகுப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய அரசு நிறுவனமான ICSIL-இல் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆய்வக உதவியாளர் (Lab Helpers மற்றும் Project Associate (Legal) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 8 பேரும் Project Associate (Legal) இடத்திற்கு ஒருவரும் என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்: 1.ஆய்வக உதவியாளர் பணிக்கு ரூ.18,993 சம்பளம் வழங்கப்படும். 2. "Project Associate (Legal) - பணிக்கு ரூ.46,000 சம்பளம் கொடுக்கப்படும்.
கல்வித்தகுதி: Project Associate (Legal) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அதாவது அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். எனினும், டெக்னிக்கல் தகுதி, ஹவுஸ் கீப்பிங், குக்கிங் சேவைகள் உள்ளிட்டவற்றில் கள அனுபவத்துடன் கூடிய டிப்ளமோ சான்றிதழ்கள் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 30( லேப் ஹெல்பர்) முதல் 32 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கால அவகாசம்: Project Associate (Legal) பதவிக்கு 29/06/2023 முதல் 11/07/2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆய்வக உதவியாளர் பணிக்கு 26.6.2023 முதல் 29.06.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்னப்பிக்க வேண்டும்.
பணி விவரம்: எனினும் இது முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. அதாவது ஒப்பந்த பணியாகும். ஒப்பந்த காலம் முடிந்த பின்னரோ அல்லது வழக்கமான பணியிடம் நிரப்பப்படும் போதோ பணியில் இருந்து விலக வேண்டியிருக்கலாம். இந்த காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரத்தை விண்ணப்பதாரர்கள் https://icsil.in/app/uploads/advertisement/Project_Associate_Legal_June_2023_website_advt.pdf என்ற இணையதள லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications