மத்திய அரசு வேலை.. அதுவும் கோவையிலேயே பணி.. 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
கோவை: கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை கீழே பார்க்கலாம்.
மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை, பருவ நிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (IFGTB) கோவையில் செயல்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள இந்த இன்ஸ்ட்டிடியூஷனில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) - 03 பணியிடங்கள், டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட் -03 பணியிடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இதில் எம்.டி.எஸ் பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணி EWS மற்றும் எஸ்.சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்படும் தேர்வு அறிவிப்பாணை லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: எம்.டி.எஸ் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட் பணியிடத்திற்கு சயின்ஸ் (BOTANY) பிரிவில் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதேபோல், டெக்னிக்கல் அஸ்சிஸ்டன்ட் மெயிண்டனன்ஸ் பணியிடத்திற்கு பி.எஸ்.சி ,டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் /இன்பர்மேஷன் டெக்னாஜி உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: எம்.டி.எஸ் பணியிடத்திற்கு 37 - வயதுக்கு (PWBD) மிகாமல் இருக்க வேண்டும். டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு (ஃபீல்டு/லேப்) -30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் மெயிண்டனன்ஸ் பணியிடத்திற்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு: மல்டி டாஸ்கிங் பணிக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமும் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு ரூ. 29,200 சம்பளமும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 30.09.2023 கடைசி நாளாகும்.
தேர்வு குறித்த முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க https://ifgtb.icfre.gov.in/jobs/vacancy40.01%202023.pdfஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து https://ifgtbrecruitment.org/IFGTB/Candidate/index 31.08.2023 காலை 10 மணி முதல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications