மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் கிரேட் சி & டி பிரிவுகளில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2006 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. சுருக்கமாக எஸ்.எஸ்.சி என்று அழைக்கப்படும் இந்த ஆணையம் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது

அந்த வகையில் தற்போது ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2006-பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..
கல்வி தகுதி: ஸ்டெனோகிராபர் கிரேட் சி & டி பணிகளுக்கு மொத்தம் 2006 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: கிரேட் சி பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை 18 - வயது 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அதாவது, விண்னப்பதாரர்கள் 02.08.1994 க்கு முன்பு பிறந்தவர்களும் 01.08.2006 க்கு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
கிரேட் டி பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். அதாவது 1997-க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு டைப்பிங் திறன் சோதிக்கபடும். இது குறித்த விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தெளிவாக இடம் பெற்றுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 17.08.2024 கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_steno_2024_07_26.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications