மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம்.. மத்திய அரசு நிறுவன வேலை.. டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!
சென்னை: மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி)யில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி) மைசூரில் உள்ளது. உணவு தானியங்கள் மற்றும் பழம், காய்கறி உற்பத்தி தொடர்பான ஆய்வை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 18 டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம் & கல்வி தகுதி:
டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள்; 18- இந்த பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் என்ஜினியரிங், முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். டெக்னிக்கல் அசிஸ்டண்ட் உணவு அறிவியல் மற்றும் உணவு தொழில் நுட்பம் ஆகிய பணியிடங்களுக்கு பிஎஸ்சி ( உணவு அறிவியல்/உணவு தொழில்நுட்பம்/உணவு அறிவியல் & ஊட்டச்சத்து) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்:
* 10.05.2025 - தேதிப்படி, 28 வயது நிரம்பியவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 33 வயது வரையும் ஓபிசி பிரிவினர் 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
* தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.35,400 - 1,12,400-வரை கிடைக்கும்.
தேர்வு முறை:
திறன் தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்னப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வரும் 10.05.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக ஒருமுறை படித்து கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்டவற்றை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க:
https://cftri.res.in/ApplicationForm/0_78778500_1744107701.pdf












Click it and Unblock the Notifications