10 ஆம் வகுப்பு முடித்தால் போதும்.. உளவுத்துறையில் வேலை! இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தந்து. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசு பணி என்பதால் நல்ல சம்பளம்+ சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால் தேர்வர்கள் மத்தியில் உளவுத்துறை வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பெரும் ஆர்வம் நிலவியது.

Job Jobs Government Jobs Chennai

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே ( டிச.14) கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை மீண்டும் ஒரு நினைவூட்டலாக இங்கே பார்க்கலாம் .

பணியிடங்கள்

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 362 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அகர்தலா - 06
அகமதாபாத் - 11
ஐஸ்வால் - 04
அமிர்தசரஸ் - 07
பெங்களூரு - 04
போபால் - 11
புவனேஸ்வர் - 07
சண்டிகர் - 07
சென்னை - 10
டேராடூன் - 8
டெல்லி / ஐபி தலைமையகம் - 108
காங்டாக் - 08
கவுஹாத்தி - 10
ஹைதராபாத் - 06
இட்டாநகர் - 25

ஜம்மு - 07
கலிம்போங் - 03
கோஹிமா - 06
கொல்கத்தா - 01
லே - 10
லக்னோ - 12

மீரட் - 02
மும்பை - 22
நாக்பூர் - 02
பனாஜி - 02
பாட்னா - 06
ராய்ப்பூர் - 04

ராஞ்சி - 02
ஷில்லாங் - 07
சிம்லா - 05
சிலிகுரி - 06
ஸ்ரீநகர் - 14
திருவனந்தபுரம் - 13
வாரணாசி - 03
விஜயவாடா - 03


கல்வித் தகுதி;

குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். வயது வரம்பை பொறுத்தவரை 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 30 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 28 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு:

மல்டி டாஸ்கிங் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900-வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட தேர்வு நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம் ஆகும். தேர்வர்கள் https://www.mha.gov.in/en என்ற வெப்சைட் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும் 14.12.2025 ஆகும்.

தேர்வு நடைபெறும் இடம்:

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/96684/Index.html

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+