எக்ஸாம் கிடையாது! சென்னை விமான நிலையத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி போதும்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும்.
இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையத்தில் காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது விமான நிலையத்தில் காலியாக உள்ள ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

கல்வி தகுதி: Utility Agent - Ramp Driver - பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அதுபோக கனரக வாகனங்களை (HMV) இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். Handyman/ Handywoman - பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆங்கிலத்தை வாசிக்கவும் புரிந்து கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: Utility Agent - Ramp Driver - பணிக்கு மாதம் ரூபாய் 24,960 சம்பளம் வழங்கப்படும். உவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,530 வழங்கப்படும். இந்த பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விமான நிலைய சேவைகளின் தேவை மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ஒப்பந்தம் அளிக்கப்படும்.
தேர்வு முறை: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aiasl.in/ என்ற விமான நிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ரூ.500-க்கான டிடியுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai -600043
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:
Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை)
Handyman; 04.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை).
தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications