அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்! தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள மிகவும் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள இந்த பல்கலைக்கழகம் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Job Jobs Government Jobs Chennai

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், நிர்வாக ரீதியான பணிகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 22 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்

ப்ராஜெக்ட் அசோசியேட்- I: 07
ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட்(PG Intern) - 04
ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட் (UG Intern - 05
ப்ராஜெக்ட் டெக்னிஷியன் - 05
ப்ராஜெக்ட் டெக்னிஷியன் (நிர்வாகம்) - 01

கல்வித் தகுதி :

* ப்ராஜெக்ட் அசோசியேட்- I: பொறியியல்/தொழில்நுட்பம்/அறிவியலில் எம்.இ./எம்.டெக்./எம்.எஸ்சி. பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட்(PG Intern) - இறுதி ஆண்டுக்கு முந்தைய/இறுதி ஆண்டு முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட் (UG Intern - இறுதி ஆண்டுக்கு முந்தைய/இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ப்ராஜெக்ட் டெக்னிஷியன் -டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டம் முடித்திருந்தால் போதும்.
* ப்ராஜெக்ட் டெக்னிஷியன் (நிர்வாகம்) - டிகிரி + 5 ஆண்டு அனுபவம் வேண்டும்.

சம்பளம் எவ்வளவு:

* ப்ராஜெக்ட் அசோசியேட்- I: Rs.35,000/-
* ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட்(PG Intern) - Rs.7,750/-
* ப்ராஜெக்ட் அசிஸ்டண்ட் (UG Intern - Rs.5,000/-
* ப்ராஜெக்ட் டெக்னிஷியன் - Rs.20,000/-
* ப்ராஜெக்ட் டெக்னிஷியன் (நிர்வாகம்) - Rs.24,000/-

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை படிக்கவும். அதன் பிறகு தங்களது CV மற்றும் சான்றிதழ் நகல்களுடன்
The Director, Centre for Composite Materials (CCM),
Anna University,
Chennai - 600 025 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

தேர்வு அறிவிப்பு

விண்ணப்பிக்க வரும் டிச.31 கடைசி நாளாகும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். தேவைக்கு ஏற்ப ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். நேர்முகத்தேர்வு ஜனவரி 08 ஆம் தேதி நடைபெறும். தேர்வு ஆனவர்களின் பட்டியல் வெளியாகும் நாள்: ஜனவரி 13, 2026. பணிக்கு சேரும் நாள்: பிப்ரவரி 02, 2026 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+