சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. ரூ.60,000 சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் உள்பட பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்கள் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் பிரபலமானது என்றால் அது அண்ணா பல்கலைக்கழகம்தான். சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழம் 1978 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அக்கவுண்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* ஸ்டார்ட்அப் எகோ சிஸ்டம் அமைப்பு உத்தி அதிகாரி - 01
* திட்ட ஒருங்கிணைப்பாளர் (திட்ட இணை I) - 01
* ஸ்டார்ட்அப் ஆய்வாளர் / மேலாளர் (திட்ட இணை II) - 02
* அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் (திட்ட உதவியாளர்) - 02 என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
கல்வித் தகுதி:
* ஸ்டார்ட் அப் எகோசிஸ்டம் அதிகாரி பணிக்கு பிஎச்.டி, எம்இ / எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிஇ / பிடெக்/ எம்.எஸ்.சி / எம்.சிஏ / எம்.பி.ஏ/ எம்.காம் அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்து இருக்க வேண்டும்.
* ஸ்டார்ட் அப் அனலிஸ்ட்/ மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்இ/ எம்.டெக் (குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் அவசியம்)
* அக்கவுன்ட்ஸ் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிபிஏ/பிகாம் முடித்து இருப்பது அவசியம். குறைந்தது 6 மாத பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் எவ்வளவு?
* ஸ்டார்ட்அப் எகோ சிஸ்டம் அமைப்பு உத்தி அதிகாரி - ரூ.60 ஆயிரம்
* திட்ட ஒருங்கிணைப்பாளர் (திட்ட இணை I) - ரூ.35 ஆயிரம்
* ஸ்டார்ட்அப் ஆய்வாளர் / மேலாளர் (திட்ட இணை II) - ரூ.60 ஆயிரம்
* அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் (திட்ட உதவியாளர்) - ரூ.20 ஆயிரம்
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் லிஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகள் அடங்கிய ரெஸ்யூம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் www.auced.com/recruitment என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் நகல்களை தபால் வழியாக விண்னப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director, Centre for Entrepreneurship Development,
#302, Platinum Jubilee Building,
2nd Floor, AC Tech campus,
Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2025 ஆகும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும். விண்ணப்பதாரர்கள் அதிகார்ப்பூர்வ தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து உறுதி செய்த பின்னர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://www.annauniv.edu/pdf/Recruitment_Notice_CED_Staff.pdf
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications