ரெடியா? மாதம் ரூ.25,000 வரை சம்பளம்.. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தலான வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்ப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Chennai Anna University Recruitment for Project Technician jobs salary up to Rs.25,000


அதாவது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வே பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (Centre For Survey Training And Research or C-STAR) காலியாக ப்ராஜெக்ட் டெக்னீசியன் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் C-STAR-ல் ப்ராஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ சிவில், பிஇ சிவில் அல்லது ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,000 முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.annauniv.edu/ இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு வரும் ஜனவரி 31ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.

பூர்த்தியிட்ட விண்ணப்பங்களை The Director, Centre for Survey Training and Research (C-STAR), Anna University, Chennai - 600 025 என்ற முகவரிக்கு ஜனவரி 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி வழங்க வேண்டும். அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால் எழுத்து தேர்வு வைத்து ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பத்தாரர்கள் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+