Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை சம்பளம்.. பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் சென்னையில் காலியாக உள்ள டிரெய்னி ஆபிசர் I மற்றும் ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது.

 Chennai BEL recruitment 2024 for Trainee officer I and Project Engineer I salary from Rs.30,000 to Rs.50,000

இந்திய ராணுவம் உள்பட பிற அமைச்சகத்துக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் புனேவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனம் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ப்ராஜெக்ட் என்ஜினீயர்ஸ்: ப்ராஜெக்ட் என்ஜினீயர்ஸ் I (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், டெலி கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு டெல்காம், நெட்வொர்க்கிங், சிசிடிவி, பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்ஸ், செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பது அவசியம்.

டிரெய்னி ஆபிசர்: டிரெய்னி ஆபிசர் I (பைனான்ஸ்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு எம்பிஏ பைனான்ஸ்/சிஏ/சிஎம்ஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: ப்ராஜெக்ட் என்ஜினீயர்ஸ் I (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். டிரெய்னி ஆபிசர் I (பைனான்ஸ்) பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும். சாதிவாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இந்த பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருப்பினும் அவர்கள் UR (Unreserved Category) பிரிவில் விண்ணப்பம் செய்யலாம். .

மாத சம்பளம்: இந்த பணி என்பது தற்காலிகமானது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். டிரெய்னி ஆபிசர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.35 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் ஆண்டு ரூ.40 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.45 ஆயிரம், 3வது ஆண்டு ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. 4வது ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டால் ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.472 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிரெய்னி என்ஜினீயர் I பணிக்கு கட்டணமாக ரூ.177 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டிரெய்னி ஆபிசர் I பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here

ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+