நோ எக்ஸாம்! டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்? சென்னை பெல் நிறுவனத்தில் சூப்பர் பணி
சென்னை: சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை எக்ஸாமின்றி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited or BEL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் இந்த நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னை கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை பெல் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Graduate Apprentics பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பணிக்கு 28 பேர், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு 25 பேர், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பணிக்கு 5 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பணிக்கு 3 பேர், சிவில் என்ஜினீயரிங் பணிக்கு 2 பேர் என மொத்தம் 63 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதேபோல் Technician (Diploma) Apprentices பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு தலா 5 பேர் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். B.Com Apprentices பணிக்கு பி.காம் 8 பேர் என தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: கிராசூவேட் அப்ரன்டீஸ் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸ் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். பி.காம் அப்ரன்டீஸ் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - சம்பளம்: விண்ணப்பம் செய்வோர் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராசூவேட் அப்ரன்டீஸ் பணிக்கு மாதம் ரூ.17,500 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸ் பணிக்கு மாதம் ரூ.12,500ம், பி.காம் அப்ரன்டீஸ் பணிக்கு ரூ.10,500 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.bel-india.in இணையதளம் மூலம் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து ஜனவரி மாதம் 10ம் தேதி காலை 10 மணிக்கு உரிய சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணலில் பங்கேற்போர் எஸ்எஸ்எல்சி, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி அனைத்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, சாதிச்சான்றிதழ், சிசிபிஏ கன்வர்சன் சர்ட்டிபிகேட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும். நேர்க்காணல் என்பது Bharat Electronics Limited Nandambakkam, Chennai - 600 089 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications