12ம் வகுப்பு போதும்! ரூ.81,000 வரை சம்பளம்! சென்னை சிஎல்ஆர்ஐ-யில் ஸ்டெனோகிராபர் வேலை.. இன்றே கடைசி
சென்னை: சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை அடையாளியில் சிஎஸ்ஐஆர் எனும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR - Central Leather Research Institute) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஸ்டெனோகிராபர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பம் செய்யலாம்.
கடந்த மாதம் வெளியான அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் காலியாக ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பொது பிரிவை சேர்ந்த 3 பேர், ஓபிசி பிரிவை சேர்ந்த ஒருவர், இடபிள்யூஎஸ் பிரிவில் ஒருவர், என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியை விரும்புவோர் அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிஇ பிரிவினர் என்றால் 10 வயது வரையும் வயது தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிடபிள்யூபிஇ, இஎஸ்எம், பெண்கள், சிஎஸ்ஐஆர் பணியாளர்கள் என்றால் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் இந்த பணியை பெற விரும்புவோர் 10, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்து சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக குறைந்தபட்சம் ரூ.25,500, அதிகபட்சமாக ரூ.81,100 வரை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 8.10.2023 நள்ளிரவு 11.30 மணிக்குள் https://www.clri.org/ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Test மூலம் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகார்பபூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications