நோ எக்ஸாம்.. கைநிறைய சம்பளம்.. அழைக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்.. சென்னையில் தான் பணி!
சென்னை அடையாறில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்னை: சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு இல்லாத நிலையில் நேர்க்காணல் முறையில் தான் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute or CLRI) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை அடையாறில் இயங்கி வருகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
சென்னை அடையாறில் இயங்கி வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதன்படி சயின்டிபிக் அட்மினிஷ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு 3 பேர், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ்ஸ் I(9 பிரிவு) பணிக்கு 9 பேர், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I-II, ஐசிஎம்ஆர் - ஜூனியர் ரீசர்ஜ் பெல்லோ பணிகளுக்கு தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு என்ன?
சயின்டிபிக் அட்மினிஷ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 50 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I, ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I-II பணிக்கு 35 வயதுக்குள்ளும், ஐசிஎம்ஆர் - ஜூனியர் ரீசர்ஜ் பெல்லோ பணிக்கு 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?
சயின்டிபிக் அட்மினிஷ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரியும், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ சிவில், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு I-II பணிக்கு எம்விஎஸ்சி (MVsc), ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் I பணிக்கு பிஇ, பிடெக், எம்எஸ்சி (கெமிஸ்ட்ரி, அப்ளைட் கெமிஸ்ட்ரி, இன்டஸ்ரியல் கெமிஸ்ட்ரி, பாலிமர் கெமிஸ்டரி, லைப் சயின்ஸ்ட், பிசிக்ஸ், பயோபிசிக்ஸ்) படித்திருக்க வேண்டும். ஐசிஎம்ஆர் - ஜூனியர் ரீசர்ஜ் பெல்லோ பணிக்கு எம்எஸ்சியில் லைப் சயின்ஸ்ட், பயோ கெமிஸ்ட்ரி, மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி, அனிமல் சயின்சஸ், பயோ டெக்னாலஷி, எம்டெக் அல்லது எம்பார்ம் பிரிவில் பயோடெக்னாலஜி, பயோபார்மசுட்டிக்கல் சயின்சஸ், பார்மசுட்டிக்ஸ்,, ஜெனிடிக் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

மாதசம்பளம் என்ன?
சயின்டிபிக் அட்மினிஷ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரமும், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. ஐசிஎம்ஆர் - ஜூனியர் ரீசர்ஜ் பெல்லோ பணிக்கு மாதம் ரூ.31 ஆயிரம் வரை கிடைக்கும். இது ஒரு தற்காலிக பணியாகும். தற்போது தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 5 மாதம் முதல் அதிகபட்சம் ஒரு ஆண்டு வரை பணி செய்ய முடியும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://clri.org/CareersForms.aspx எனும் இணையதளம் சென்று விண்ணப்ப படிவம் பதிவிறக்கி சரியாக பூர்த்தி செய்து சுயஒப்பமிட்டு தங்களின் படிப்பு சார்ந்த அனைத்து ஆவணங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். இந்த நேர்க்காணல் என்பது CSIR -Central Leather Research Institute, Sardar Patel road, Adyar, chennai - 600 020 எனும் முவகரியில் மார்ச் 28 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நேர்க்காணலில் தேர்வு செய்யப்படுவோர் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications