சென்னை பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. ஆண்டுக்கு ரூ. 5-12 லட்சம் வரை சம்பளம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் சிஜிஐ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தற்போதைய சூழலில் ஐடி நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் பிரபல சிஜிஐ (CGI) ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த சிஜிஐ நிறுவனத்தில் சாப்டே்வர் டெவலப்மென்ட்/என்ஜினீயரிங் பிரிவில் SQL server DBA + SQL Developer காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது இளங்கலை பட்டப்படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு 2019, 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் oracle, performance Tuning, SQL, SQL Server, Pentaho அறிவை பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் SQL Server databases பராமரிப்பு, இன்டெக்ஸ் ரீபில்டிங், டேட்டாபேஸ் ட்யூனிங், டேட்டாபேஸ் பெர்ஃபாமன்ஸ்ஸில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications