Cognizant-ல் வேலை.. டிகிரி முடித்தவர்களா நீங்கள்? சென்னையிலேயே ஐடி வேலைக்கு செல்ல ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன்(Cognizant Technology Solutions Corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன். இந்த காக்னிசண்ட் நிறுவனம் நிதி, சுகாதாரம், சில்லறை வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை கிளையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலியிடங்கள் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இல்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்த பணிக்கு 2021, 2022, 2023, ஆண்டுகளில் கல்லூரி, பல்கலைக்கழங்களில் டிகிரி முடித்தவர்கள், 2024ல் டிகிரி முடிப்போர் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலம் நன்கு தெரிந்திருப்பதோடு, உரையாடும் திறன் இருக்க வேண்டும். மேலும் MS Excel, MS Word தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் குறித்த தகவல் அறிவிப்பில் இல்லை. இருப்பினும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சமாக ரூ.33,333 சம்பளமாக கிடைக்கும். அதிகபட்சம் என்றால் ரூ.58,333 வரை சம்பளமாக கிடைக்கும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் 11 நாட்களில் முடிவடைய உள்ளது. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்திலேயே பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications