மாதம் ரூ.60,000 வரை சம்பளம்.. சென்னை மாநகராட்சியில் ஏராளமான வேலைவாய்ப்பு.. சூப்பர் வாய்ப்பு!
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ, டாக்டர் படிப்பை முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம்.
சென்னை: சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 560 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு படித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ, டாக்டர் படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.8,500 முதல் அதிகபட்சமாக மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநகராட்சியாகவும், பழம்பெரும் மாநகராட்சியாகவும் சென்னை உள்ளது. இங்கு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்-வயது வரம்பு என்ன?
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 4 பிரிவுகளில் 560 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மெடிக்கல் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ், மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் - II), சப்போர்ட் ஸ்டாப் ஆகிய பிரிவுகளில் தலா 140 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது வரம்பு என்பது 27.02.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிக்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். மெடிக்கல் ஆபிசர் பணிக்கு எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும். ஸ்டாப் நர்ஸ் பணிக்கு டிப்ளமோ இன் ஜிஎன்எம் அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் - II) பணிக்கு 12ம் வகுப்பும், சப்போர்ட் ஸ்டாப் பணிக்கு 8 ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
மெடிக்கல் ஆபிசர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ஸ்டாப் நர்ஸ் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம், மல்டி பர்பஸ் ஹெல்த் வொர்க்கர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் - II) பணிக்கு மாதம் ரூ.14 ஆயிரம், சப்போர்ட் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கி உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து Member Secretary, CCUHM/City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, 3rd Floor, Amma Maligai, Rippon Buildings, Chennai - 3 என்ற முகவரிக்கு மார்ச் 7 ம் தேதிக்குள் அனு்ப்பி வைக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications