Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சியில் வேலை.. 60 ஆயிரம் வரை சம்பளம்.. 8 ஆம் வகுப்பு முடிச்சவங்களும் அப்ளை பண்ணலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் உள்பட 84 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு காணலாம்.

சென்னை மாநகராட்சியில் மருத்துவ அலுவலர், செவிலியர், பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) - ஆண், மற்றும் ஆதரவுப் பணியாளர் உள்ளிட்ட 84 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையிலேயே பணி அமர்த்தப்படுவார்கள்.

chennai-corporation-recruitment-84-health-inspector-posts-salary-up-to-rs-60-000-for-class-8-pass

பணியிடங்கள் விவரம்:

மொத்தமுள்ள 84 காலியிடங்களில்,
மருத்துவ அலுவலர் - 14,
செவிலியர் - 10,
பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) - ஆண் - 20, மற்றும் ஆதரவுப் பணியாளர் - 40

தேர்ந்தெடுக்கப்படுவோர் அனைவரும் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வித் தகுதி:

* மருத்துவ அலுவலருக்கு எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டம் அவசியம்.
* செவிலியருக்கு DGNM அல்லது B.Sc., நர்சிங் கல்வித் தகுதி கட்டாயம்.
* ஆதரவுப் பணியாளர் / மருத்துவமனை பணியாளருக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

* பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) - ஆண் பிரிவினருக்கு, 12 ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி அவசியம். மேலும், 10 ஆம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும், அத்துடன் இரண்டு ஆண்டு பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / சுகாதார துப்புரவு ஆய்வாளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

* மருத்துவ அலுவலர் - 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* செவிலியர் - 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் - 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* ஆதரவுப் பணியாளர் - 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் எவ்வளவு?

* மருத்துவ அலுவலர் - மாதம் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும்.
* செவிலியர் - ரூ.18,000
* பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் - ரூ.14,000
* ஆதரவுப் பணியாளர் - ரூ.8,500 சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaicorporation.gov.in/ இல் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

"செயலாளர்,
CCUHM / நகர சுகாதார அலுவலர்,
பொது சுகாதாரத்துறை,
3 ஆம் தளம், அம்மா மாளிகை,
பெருநகர சென்னை மாநகராட்சி,
ரிப்பன் மாளிகை, சென்னை - 3" என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பிக்கும் முன், முழுமையான அறிவிப்பை கவனமாகப் படிப்பதும், அனைத்து தகுதிகளையும் சரிபார்ப்பதும் அவசியம். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 09.01.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி பார்த்துக்கொள்ளவும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+