சென்னையிலேயே பணியாற்ற சூப்பர் சான்ஸ்.. மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: சென்னை மாநகராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஒழிப்பு இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், லேப் டெக்னீசியன் மற்றும் உதவியாளர் என மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முதுகலை பட்டம் முடித்தவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஒழிப்பு இயக்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், லேப் டெக்னீசியன் மற்றும் உதவியாளர் என மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - 1
DR-TB மைய புள்ளிவிவர உதவியாளர் - 1
மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - 1
கணக்காளர் - 1
லேப் டெக்னீஷியன் - 28
காசநோய் சுகாதார பார்வையாளர் - 14
கல்வித் தகுதி:
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - MBA/ PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் கட்டாயம்.
DR-TB மைய புள்ளிவிவர உதவியாளர் - புள்ளியியல் பாடத்தில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பு படித்து இருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும்.
மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - Bachelor's degree in Science மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
கணக்காளர் - Graduate in Commerce படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
லேப் டெக்னீஷியன் - 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma course in Medical Laboratory படித்திருக்க வேண்டும்.
காசநோய் சுகாதார பார்வையாளர் - Graduate in science or Twelfth (10+2) in science and two year course in MPHW/ LHV/ ANM/ Health worker படித்திருக்க வேண்டும்
சம்பளம் எவ்வளவு?
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் - ரூ. 26,500
DR-TB மைய புள்ளிவிவர உதவியாளர் - ரூ. 26,000
மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் - ரூ. 19,800
கணக்காளர் - ரூ. 16,000
லேப் டெக்னீஷியன் - ரூ. 13,000
காசநோய் சுகாதார பார்வையாளர் - ரூ. 13,300
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிக அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி;
The Member Secretary,
National Tuberculosis Elimination Programme,
Public Health Department,
Ripon Building, Chennai-600003
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 9.7.2025 அன்று மாலைக்குள் விண்ணப்பம் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். தேர்வு அறிவிப்பு குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ள: https://chennaicorporation.gov.in/ .












Click it and Unblock the Notifications