Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10, +2 முடித்தாலே போதும்.. மாதஊதியம் ரூ.19,900 டூ ரூ.69,100.. சென்னை சுங்கத்துறையில் சூப்பர் வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சுங்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.69,1000 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

சென்னை ராஜாஜி சாலையில் சென்னை கஸ்ட்ம்ஸ் (சுங்கத்துறை) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை சுங்கத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 2 வகையான அறிவிப்புகள் வாயிலாக 4 வெவ்வேறு பிரிவுகளில் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்2 அறிவிப்புகளின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

 Chennai Coustom House Recruitment for 4 various category including Clear and Staff Car Driver

காலியிடங்கள்: சென்னை சுங்கத்துறையில் ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver -Ordinary Grade) பணிக்கு 7 பேர், ஹால்வாய் கம் குக் ( Halwai-cum-Cook), கிளர்க் (Clerk) பணிக்கு தலா ஒருவர் மற்றும் கேன்டீன் அட்டென்டென்ட்(Canteen Attendant) பணிக்கு 8 பேர் என மொத்தம் 17 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதி: இதில் ஸ்டாப் கார் டிரைவர் பணியை பெற விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பை படித்திருக்க வேண்டும். அதோடு மோட்டார் வாகனத்துக்கு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். ஹால்வாய் கம் குக் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருப்பதோடு டிப்ளமோ கேட்டரிங் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கிளர்க் பணிக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை வணிகவியல் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தியில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கேன்டீன் அட்டென்டன்ட் பணிக்கு 10ம் வகுப்ப முடித்திருந்தால் போதும்.

வயது வரம்பு: கார் டிரைவர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின் படி ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.

 Chennai Coustom House Recruitment for 4 various category including Clear and Staff Car Driver

மாதசம்பளம்: ஹால்வாய் கம் குக் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். கிளர்க் மற்றும் கார் டிரைவர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். கேன்டீன் அட்டென்டன்ட் பணிக்கு மாதம ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.chennaicustoms.gov.in சென்று விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வி சான்று, மதிப்பெண் சான்று, வயதுக்கான ஆவணம் உள்ளிட்ட விபரங்களுடன் ஸ்பீட் போஸ்ட் அல்லது சாதாரண போஸ்ட்டில் அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இந்த போஸ்ட் ஜூன் 30ம் தேதிக்குள் The Additional Commissioner Of Customes (Establishment), General Commissionerate, Office Of The Principal Commissiner Of Customs, Custom House, No.60, Rajaji Salai, Chennai - 600 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோரின் திறமைகள் ஆராயப்பட்டு பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

கிளர்க் மற்றும் கேன்டீன் பணியாளர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here

கிளர்க் மற்றும் கேன்டீன் பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

டிரைவர் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here

டிரைவர் பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Her

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+