இன்று நேரடியாக இன்டர்வியூவில் பங்கேற்கலாம்! மாதசம்பளம் ரூ.31,000.. அழைக்கும் சென்னை சிஎல்ஆர்ஐ
சென்னை: சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து தேர்வின்றி நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று (வியாழக்கிழமை)காலை 9 மணிக்கு நேரடியாக இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை அடையாறில் சிஎஸ்ஐஆர் எனும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR - Central Leather Research Institute) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்க்காணல் நாளை நடைபெற உள்ளது. அதன் விபரம் வருமாறு:
* ப்ராஜெக்ட் அசோசியேட் - I (Project Associate - I) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பிஇ, பிடெக் பிரிவில் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், எம்இ, எம்டெக்கில் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில், என்விரான்மென்டல் என்ஜினீயரிங் முடித்து 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.31 ஆயிரம் + HRA (With NET/GATE) அல்லது ரூ.25 ஆயிரம் + HRA (Without NET/GATE)
* ஜுனியர் ரீசர்ஜ் பெல்லோ (Junior Research Fellow) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்எஸ்சி கெமிஸ்ட்ரி முடித்த நெட், கேட் முடித்து 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.31 ஆயிரம் + எச்ஆர்ஏ வழங்கப்படும்.
* சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் (Senior Project Associate) - இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். கெமிஸ்ட்ரி, கெமிக்கல் டெக்னாலஜி, என்விரான்மென்டல் டெக்னாலஜி, என்விரான்மென்டல் சயின்சஸ் அண்ட் என்ஜினீயரிங் அல்லது எம்எஸ்சி கெமிஸ்ட்ரி, அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி, பிடெக் கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல், டெக்னாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் சயின்ஸ்/என்விரான்மென்டல் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்து 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.42 ஆயிரம் + எச்ஆர்ஏ வழங்கப்படும்.
* ப்ராஜெக்ட் அசோசியேட் - I (Project Associate - I ) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிடெக், பிஇ பிரிவில் கெமிக்கல் என்ஜினீயரிங், ப்ரோடக்சன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் எம்டெக் எம்இ பிரிவில் இன்டஸ்ட்ரியல் சேஃப்டி படிப்பை முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.25 ஆயிரம் + எச்ஆர்ஏ வழங்கப்படும்.
* ப்ராஜெக்ட் அசோசியேட் I பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்எஸ்சி இயற்பியல், வேதியியல் படிப்பை முடித்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் ரூ.25 ஆயிரம் + எச்ஆர்ஏ வழங்கப்படும். மேலும் அனைத்து பணிகளுக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வுகளும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தகுதி மற்றும் விருப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.clri.org/ விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு ஆதார் கார்டு, வோட்டர் கார்டு, கல்வி சான்றிதழ்களுடன் ஒரிஜினல், ஜெராக்சுடன் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் என்பது CSIR - Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai - 6000 020 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணி தொடர்பான அதிகார்பபூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் மார்ச் 20ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications