தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதுமே.. அறநிலையத் துறை வேலைவாய்ப்பு! இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!
சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள ஏழு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் முதல் 41, 800 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை நிர்வகித்து வருகிறது. கோவிலின் வரவு செலவு, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பணியிடங்களை நிரப்புவதையும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகிறது.

அந்த வகையில் புகழ்பெற்ற சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஏழு பணிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"
1. பணியின் பெயர்: பரிசாகர்/சுயம்பாகி
காலிப்பணியிடம்: 1
ஊதிய விகிதம்: 13,200 முதல் 49800 வரை
தகுதிகள்: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயில் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப நைவேத்திய மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
2.பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
ஊதிய விகிதம்: 12,600 முதல் 39 ஆயிரத்து 900 வரை
காலி பணியிட எண்ணிக்கை: 1
தகுதிகள்: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: இரவு காவலர்
ஊதிய விகிதம்: 11,600 முதல் 36 ஆயிரத்து 800 வரை
காலி பணியிடம் எண்ணிக்கை:1
தகுதிகள்: தமிழில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்க வேண்டும்
4. பணியின் பெயர்: திருவலகு
ஊதிய விகிதம்: 10,000 முதல் 31,500 வரை
காலிப் பணியிடம் எண்ணிக்கை: 4
தகுதிகள்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf
விண்ணப்பங்களை 05.02.2005 முதல் 07.03.2025 வரை திருக்கோவில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோவில் அலுவலகத்தில் 07.03.2025 அன்று மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் திருத்தங்கள் மாற்றங்கள் இருப்பின் துறை இணைய தள முகவரியில் மட்டுமே வெளியிடப்படும்.
விண்ணப்பத்தை பெற: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf என்ற முகவரியை கிளிக் செய்யவும்
நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரார் 01.07.2024 ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்
2.இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
3. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் திருக்கோவிலில் உப கோவில்களுக்கும் பணியிடமாதல் செய்யப்படுவர்.
4.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் 'குறிப்பிட்ட பணியிடத்துக்கான விண்ணப்பம்' என தெளிவாக குறிப்பிட்டு, "செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், அமைந்தகரை, சென்னை-29" என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் 35 ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உரையிலும் இணைத்து அனுப்ப வேண்டும்.
5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.03 2025 மாலை 5:45 மணிக்குள் கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications