பியூஷ் கோயலிடம் தொடர்ந்து பேசும் எஸ்பி வேலுமணி, தங்கமணி.. அதிமுகவில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி தரப்பினர் நாடியுள்ளனர். அதிமுகவில் இதே நிலை நீடித்தால் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு எந்த லாபமும் இருக்காது என்று கூறியுள்ள எஸ்பி வேலுமணி தரப்பு, எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்ட பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிருப்தியில் இருந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் பதவியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. அதேபோல் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Edappadi Palaniswami

எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை வேறு நிர்வாகிகள் மூலமாக நாடிய போதும் கூட, கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கட்டும் என்று விடாபிடியாக கூறி இருக்கிறார். மறுபக்கம் தவெகவிலும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதனால் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கட்சி வேலைகளில் ஆர்வம் காட்டாமல் அமைதியாகிவிட்டனர். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் தன்னுடைய ஆதரவாளர்களை பதவிக்கும், பொறுப்புக்கும் கொண்டு வர தயாராகிவிட்டார். அவர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி வருகிறார். இதனால் அதிருப்தி எம்எல்ஏ எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவிடம் பேச தொடங்கி இருக்கின்றனர்.

பாஜகவின் தமிழக பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் எஸ்பி வேலுமணி, தங்கமணி தரப்பு பேச தொடங்கி இருக்கிறது. அதிமுகவின் சூழல் சரியில்லை.. இப்படியே சென்றால் லோக்சபா தேர்தலிலும் கூட பாஜகவுக்கு எந்த லாபமும் இருக்காது என்று நேரடியாகவே பியூஷ் கோயலிடம் கூறி இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் பாஜக இம்முறை தமிழ்நாட்டில் சில இடங்களையாவது எதிர்பார்க்கிறது.

ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷாவால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. தவெக திடீரென ஆட்சி அமைத்திருப்பதால், அமித்ஷா கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக அக்கட்சியின் சொல்லுகின்றனர். அதேபோல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், தமிழக அரசியலில் கவனம் செலுத்தவும் அவருக்கு நேரம் இல்லை.

இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின் அமித்ஷா, தமிழக அரசியலில் கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுவரை அதிமுகவினரும் அமைதி காக்க முடிவு செய்திருக்கின்றனர். அதேபோல் டிடிவி தினகரனை அதிமுகவுக்குள் கொண்டு வரும் முடிவில் எஸ்பி வேலுமணி இருப்பதையும் அமித்ஷா காது கொடுத்து கேட்டிருப்பதகாகவும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+