மாதஊதியம் ரூ.92,300.. இஎஸ்ஐசி-யில் வேலை வேண்டுமா? டிகிரி, டிப்ளமோ போதும்.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் இஎஸ்ஐசி எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் குறைந்தபட்சமாக ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரையிலான சம்பளத்தில் பணியை பெறலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் இஎஸ்ஐசி எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Chennai ESIC recruitment 2023 for various post including ECG Technician

இசிஜி டெக்னீசியன்: இந்த பணிக்கு மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2 ஆண்டு டிப்ளமோ பிரிவில் இசிஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஜூனியர் ரேடியோகிராபர்: இந்த பணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2 ஆண்டு டிப்ளமோ ரோடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஜூனியர்மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்: இந்த பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பத்தாரர்கள் 12ம் வகுப்பை சயின்ஸ் பாடங்களுடன் முடித்து டிப்ளமோ மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜிஸ்ட் படிப்பை முடித்து 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.

ஓடி அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு 10 தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர். 10, பிளஸ்2 படிப்புடன் ஓராண்டு ஆபரேஷன் தியேட்டர் பணியில் அனுபவம் கொண்டிருப்பதோடு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்.

பார்மசிஸ்ட்(அல்லோபதி): இந்த பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பார்மஸி பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ பார்மஸி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.29200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.

பார்மசிஸ்ட்(ஆயுர்வேதம்): இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12ம் வகுப்பு பாஸாகி பி.பார்ம் படிப்பில் ஆயுர்வேத படிப்பை முடித்திருக்க வேண்டம். இல்லாவிட்டால் டிப்ளமோ ஆயுர்வேத பார்முஸி படிப்பை முடித்து 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.

ரேடியோகிராபர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதசம்பளமாக ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருப்பதோடு 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ ரேடியோகிராபி படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். .

வயது தளர்வு: மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும், இஎஸ்ஐசி பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள் www.esic.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், துறை ஊழியர்கள், பெண்கள், படை வீரர்களுக்கான விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+