ரூ.1.12 லட்சம் சம்பளம்.. 10ம் வகுப்பு, டிகிரி போதும்.. சென்னை என்ஐஆர்டி-யில் அசத்தலான வேலை
சென்னை: சென்னையில் ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்ஐஆர்டி-யில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் அட்டென்டென்ட் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.18 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.12 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சிலின் கீழ் என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை என்ஐஆர்டி-யில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (குரூப் - பி) பணிக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் லேப் அட்டென்டென்ட் - I (குரூப் - சி) பணிக்கு 13 பேர் என மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நவம்பர் மாதம் 8 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
கல்வி தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு மைக்ரோபயாலஜி, மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி, ஸ்டேட்டிஸ்டிக்ஸ், அப்ளைட் ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பார்மஸி, பயோ டெக்னாலஜி, மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி, கிளினிக்கல் பார்மகோலாஜி, பயோ மெடிக்கல் சயின்ஸ்சஸ், சைக்கலாஜி, சோசியல் வொர்க், ரோடியோகிராபி, மெடிக்கல் டெக்னாலஜி, வெட்னரி சயின்சஸ் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
என்ஜினியரீங்: இல்லாவிட்டால் என்ஜினியரீங் பிரிவில் பயோஇன்பர்மெட்டிக்ஸ், லைப்சயின்சஸ், பயோ மெடிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆட்டோமொபைல், படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளேமா பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
லேப் அட்டென்டென்ட்: இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்து ஆய்வகத்தில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் வகுப்பு முடித்து பிளம்பர் பணியில் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் என்ன: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். லேப் அட்டென்டென்ட் I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 8 ம் தேதிக்குள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் சிபிடி(Computer Based Test) மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications