கைநிறைய சம்பளம்.. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் முதல் டாக்டர் வரை.. சென்னை என்ஐஆர்டி-யில் அசத்தலான வேலை
சென்னை: ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் சென்னையில் இயங்கி வரும் என்ஐஆர்டி-யில் 7 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,800 முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த கவுன்சிலின் கீழ் என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்கி வருகிறது. இங்கு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை ஐசிஎம்ஆர் என்ஐஆர்டி-யில் ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்) பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிக்கு ஒருவர், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 13 பேர், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்) பணிக்கு 11 பேர், ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி பணிக்கு ஒருவர், சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 2 பேர், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிக்கு 2 பேர் என மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு எம்பிபிஎஸ் + எம்பிஎச்/பிஎச்டி முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ (எம்எல்டி/டிஎம்எல்டி) முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்) பணிக்கு 10ம் வகுப்பு + டிப்ளமோ (எம்எல்டி/டிஎம்எல்டி) முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளுக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டு்ம. ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 30 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்), ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், பணிகளுக்கு 28 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளுக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பதும் அளிக்கப்படும்.
மாத சம்பளம்: ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு மாதம் ரூ.80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு ரூ.20 ஆயிரம், ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்), ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி பணிகளுக்கு ரூ.18 ஆயிரம், சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.17 ஆயிரம், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிக்கு ரூ.15,800 வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு தற்காலிக பணியாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nirt.res.in அல்லது www.icmr.nic.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். நேர்க்காணல் என்பது ICMR-National institute For Researh In Tuberculosis, No.1.Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031 என்ற முகவரியில் பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
குறிப்பாக ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்), ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்), ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்) உள்ளிட்ட பணியை பெற விரும்புவோர் பிப்ரவரி 12ம் தேதி காலை 9 மணி முதல் காலை 10 மணிக்குள் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளை விரும்புவோர் பிப்ரவரி 13ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். அப்போது எழுத்து தேர்வு மற்றும் பர்ஷனல் இன்டர்வியூ நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படும். நேர்க்காணலில் பங்கேற்க செல்வோர் கல்வி சான்று, வயது, சாதி சான்று, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் வைத்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications