மிஸ் பண்ணாதீங்க.. டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவரா? சென்னை ஐஐடியில் ஏராளமான வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியில் ஜுனியர் டெக்னீசியன் உள்பட 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி, டிப்ளேமா, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.19,900 முதல் ரூ.2.09 லட்சம் வரையிலான சம்பளத்தில் வேலையை பெற முடியும்.

இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலும் ஐஐடி இயங்கி வருகிறது.

Chennai IIT Recruitment 2024 for 41 post including Superintending Engineer and Junior Technician

இந்நிலையில் தான் சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: சென்னை ஐஐடியில் சூப்பிரண்டிங் என்ஜினீயர் (குரூப் ஏ) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜுனியர் டெக்னீசியன் (குரூப் சி) பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜுனியர் டெக்னீசியன் பணியை பொறுத்தமட்டில் பிரிவு வாியாக சிவில் - 3, கெமிஸ்ட்ரி - 3, கம்பயூட்டர் சயின்ஸ் - 1, மெக்கானிக்கல் - 11, இசிஇ - 2 இ அண்ட் ஐ (E & I) - 12, இஇ (EE) - 2 பேர், பயோலஜி/லைப் சயின்ஸ் - 1, பயோ டெக்னாலஜி - 1, பயோ மெடிக்கல் - 1, விலங்கியல் - 1 என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிஜிபிஏ (CGPA) உடன் குரூப் ஏ பிரிவில் 8 ஆண்டு அனுபவத்தில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டு எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிஜிபிஏ உடன் குரூப் ஏ பிரிவில் 10 ஆண்டு அனுபவத்தில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டு எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். ஜுனியர் டெக்னீசியன் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளேமா என்ஜினீயரிங் அல்லது பிஎஸ்சி பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: சூப்பிரண்டிங் என்ஜினீயரிங் பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜுனியர் டெக்னீசியன் பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயதுக்குள், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பது 02.04.2024ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளம்: சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.78,800 முதல் அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை (லெவல் - 12) சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஜுனியர் டெக்னீசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் ரூ.63,200 (லெவல் 2) வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 2ம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி/ட்ரேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+